ஒலி பெருக்கி

3.8
72.9ஆ கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் Android மொபைலையும் ஹெட்ஃபோன்களையும் பயன்படுத்தி அன்றாட உரையாடல்களையும் அவர்களைச் சுற்றியுள்ள ஒலிகளையும் எளிதில் அணுக ஒலிபெருக்கி உதவுகிறது. உங்களைச் சுற்றியும் உங்கள் சாதனத்திலும் கேட்கும் ஒலிகளை வடிகட்டவும் வலுப்படுத்தவும் அதிகரிக்கவும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தலாம்.

Android 8.1 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் சாதனங்களில் கிடைக்கிறது. ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தொடங்க உங்கள் ஹெட்ஃபோன்களை மொபைலுடன் இணைத்து, அமைப்புகள் > அணுகல்தன்மை > ஒலிபெருக்கி என்பதற்குச் செல்லவும் அல்லது அமைப்புகள் > அணுகல்தன்மை > பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ் என்பதற்குச் செல்லவும்.

அம்சங்கள்
• பேசுவதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காகத் தேவையற்ற இரைச்சலைக் குறைக்கும்.
• உரையாடல் பயன்முறையில் இருக்கும்போது, இரைச்சலான இடங்களில் உரையாடிக் கொண்டிருக்கும் நபரின் குரல் மீது கவனம் செலுத்தும். (Pixel 3 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கிறது.)
• உரையாடல்களையும் டிவியின் ஒலிகளையும் விரிவுரைகளையும் கேட்கலாம். தூரத்திலிருந்து ஒலிக்கும் ஆடியோக்களுக்கு புளூடூத் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. (புளூடூத் ஹெட்ஃபோன்களில் ஒலிப் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படக்கூடும்.)
• சுற்றி நிகழும் உரையாடலுக்கான அல்லது சாதனத்தில் இயங்கும் மீடியாவிற்கான உங்கள் கேட்கும் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்கிக் கொள்ளலாம். இரைச்சலைக் குறைக்கலாம் அல்லது குறைந்த அதிர்வெண், அதிக அதிர்வெண், மெல்லிய ஒலிகள் ஆகியவற்றை பூஸ்ட் செய்யலாம். இரண்டு காதுகளுக்கும் ஒரே மாதிரியான அல்லது தனித்தனியான விருப்பத்தேர்வுகளை அமைக்கலாம்.
• அணுகல்தன்மை பட்டனையோ சைகையையோ விரைவு அமைப்புகளையோ பயன்படுத்தி ஒலிபெருக்கியை இயக்கலாம் முடக்கலாம். அணுகல்தன்மை பட்டன், சைகை, விரைவு அமைப்புகள் ஆகியவை குறித்து மேலும் அறிக: https://support.google.com/accessibility/android/answer/7650693

• உங்கள் ஆப்ஸ் பட்டியலில் ஒலிபெருக்கியைச் சேர்ப்பதன் மூலம் அதை எளிதாகத் திறக்கலாம். ஒலிபெருக்கி அமைப்புகளில், “ஆப்ஸ் பட்டியலில் ஐகானைக் காட்டு” என்பதை இயக்கவும்.

தேவைகள்
• Android 8.1 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கிறது.
• உங்கள் ஹெட்ஃபோன்களை Android சாதனத்துடன் இணைக்கவும்.
• உரையாடல் பயன்முறை தற்சமயம் Pixel 3 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கிறது.

ஒலிபெருக்கி குறித்த உங்களின் கருத்தை sound-amplifier-help@google.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான உதவிக்கு https://g.co/disabilitysupport எனும் பக்கத்திற்குச் சென்று எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

அனுமதிகளுக்கான அறிவிப்பு
மைக்ரோஃபோன்: மைக்ரோஃபோனுக்கு அணுகலை வழங்குவது, ஆடியோவை அதிகரிக்கவும் வடிகட்டவும் ஒலிபெருக்கியை அனுமதிக்கும். எந்தத் தரவையும் சேகரிக்கவோ சேமிக்கவோ முடியாது.
அணுகல்தன்மை சேவை: இந்த ஆப்ஸ் ஓர் அணுகல்தன்மை சேவை என்பதால் இது உங்கள் செயல்களைக் கவனிக்கலாம், சாளர உள்ளடக்கத்தை மீட்டெடுக்கலாம், நீங்கள் டைப் செய்யும் வார்த்தைகளைக் கவனிக்கலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
5 பிப்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆடியோ, மேலும் 3 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது
சுயமான பாதுகாப்பு மதிப்பாய்வு

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.8
72ஆ கருத்துகள்
Jaishankar JAISHANKAR
20 அக்டோபர், 2023
~GOOD @PP$ IN £€₩TUR€~ ~《$OUND¤€XP€RI€NC€》~
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
ராமச்சந்திரன் கலியன்
16 செப்டம்பர், 2023
தமிழ்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Ramesh K (GK tailor)
6 செப்டம்பர், 2023
Super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?