Google கேமராவிற்கான டைவ் கேஸ் இணைப்பானுடன் கடலுக்குள் வண்ண மீன்களைப் படமெடுத்து மகிழுங்கள். தண்ணீருக்குள் படம் எடுக்கும் அம்சத்தை ஆதரிக்கும் ஸ்கூபா டைவிங் கேஸின் உதவியுடன் உங்களுக்குப் பிடித்தமான Google கேமரா அம்சங்களைப் பயன்படுத்தி ஆழ்கடலில் அழகிய படங்களை எடுங்கள்.
• கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம் - மொபைலின் பேட்டரி, கேஸின் பேட்டரி, நீரின் வெப்பநிலை, ஆழ அளவு ஆகியவற்றை எப்போதும் கண்காணியுங்கள்.
• பிடித்தமான பயன்முறைகளைப் பயன்படுத்தலாம் - Google கேமராவிலுள்ள கேமரா, உருவப்படம், இரவு ஒளி, வீடியோ ஆகிய பயன்முறைகளைப் பயன்படுத்திப் பாருங்கள்.
• சுலபமாக ஃபோக்கஸ் செய்யலாம் - “ஃபோக்கஸ் பட்டனை” அழுத்தி கடல் வாழ் உயிரினங்களை ஃபோக்கஸ் செய்யுங்கள்.
தேவையானவை - Google கேமரா 7.4.105 அல்லது அதற்குப் பிந்தையது. சில அம்சங்கள் அனைத்துச் சாதனங்களிலும் கிடைக்காது.
புதுப்பிக்கப்பட்டது:
11 மே, 2023