பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், பார்வையற்றோர், டிஸ்லெக்சியா உள்ளோர் ஆகியோருக்காக Reading mode ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக்கக்கூடிய ஒளி மாறுபாடு, வார்த்தைகளின் அளவு, எழுத்திலிருந்து பேச்சு, பக்கத்திலுள்ள தேவையற்ற விவரங்கள், எழுத்து வடிவ வகைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி சாதனத்தில் உங்களின் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்த இது உதவுகிறது. பதிவிறக்கியதும், உங்கள் விரைவு அமைப்புகளில் ஆப்ஸ் ஒருங்கிணைக்கப்படும். இதனால் ஆப்ஸிலும் இணையப் பக்கங்களிலும் இதை எளிதாக அணுகலாம்.
வழிமுறைகள்:
தொடங்குவதற்கு:
1. Play Store மூலம் Reading mode ஆப்ஸைப் பதிவிறக்கி நிறுவவும்
2. உங்கள் முகப்புத் திரையில் உள்ள Reading mode ஆப்ஸைத் தட்டித் திறக்கவும்
3. பயிற்சி ஆவணத்தைப் படித்துப் பார்க்கவும். அது உங்களை அமைப்புகளுக்குத் திருப்பிவிடும்
4. அமைப்புகளில், “Reading mode” என்பதைத் தட்டி “Reading mode ஷார்ட்கட்” என்பதை ஆன் செய்வதன் மூலம் உங்கள் சாதனத்திற்கான அணுகலை அதற்கு வழங்கவும்
5. Reading mode ஆப்ஸுக்கான வெவ்வேறு ஷார்ட்கட்களை அமைக்க, https://support.google.com/accessibility/android/answer/7650693 எனும் பக்கத்தைப் படித்துப் பார்க்கவும்
முக்கிய அம்சங்கள்:
• வாசிப்பை மையப்படுத்தும் காட்சி: உள்ளடக்கத்தை அணுகுவதையும் அதில் கவனம் செலுத்துவதையும் எளிதாக்கும் பொருட்டு, தேவையற்ற விவரங்கள் இல்லாதபடி பிரத்தியேகமான வாசிப்புச் சூழலை Reading mode ஆப்ஸ் வழங்குகிறது
• எழுத்திலிருந்து பேச்சு: ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் எழுத்து வடிவ உள்ளடக்கத்தைச் சத்தமாக வாசிக்கச் செய்து கேட்கலாம். உயர்தர நீண்ட வடிவக் குரல்களில் இருந்து தேர்ந்தெடுக்கலாம். ஆடியோ கட்டுப்பாட்டு விருப்பங்களைப் பயன்படுத்தி விரும்பும்போது எளிதாகப் பின்செல்லலாம், விரைவாக முன்னோக்கிச் செல்லலாம், வாசிப்பு வேகத்தை மாற்றலாம்
• எழுத்து வடிவ வகையையும் அளவையும் மாற்றுதல்: உங்கள் வாசிப்புத் தேவைகளுக்கு ஏற்றபடி எழுத்து வடிவ அளவுகள், ஸ்டைல்கள், வண்ணங்கள், வரி இடைவெளிகள் ஆகியவற்றுக்கு இடையே விரைவாக மாற்றிக்கொள்ளலாம்
• விரைவு அணுகல்: Reading mode ஆப்ஸைப் பதிவிறக்கியதும், விரைவான அணுகலுக்காக மொபைல் இடைமுகத்தில் அது ஒருங்கிணைக்கப்படும்
• பல்வேறு மொழிகளுக்கான ஆதரவு: Reading mode ஆப்ஸ் ஆங்கிலம், ஃபிரெஞ்சு, இத்தாலியன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளை ஆதரிக்கிறது, மேலும் கூடுதல் மொழிகள் சேர்க்கப்படவுள்ளன.
• TalkBack உடன் இணக்கமானது: ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தும்போது Reading mode ஆப்ஸை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
• இது தனியுரிமையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது: உள்ளடக்கம் உங்கள் மொபைலிலேயே இருக்கும், அது வேறெங்கும் அனுப்பப்படாது.
உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் இந்தத் தயாரிப்பு தொடர்பான அறிவிப்புகளைப் பெறவும் https://groups.google.com/forum/#!forum/accessible எனும் குழுவில் இணையுங்கள்.
தேவையானவை:
• Android 9 மற்றும் அதற்குப் பிந்தைய மொபைல்களில் கிடைக்கிறது
• Reading mode ஆப்ஸ் தற்போது ஆங்கிலம், ஃபிரெஞ்சு, இத்தாலியன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளை ஆதரிக்கிறது
அனுமதிகள் அறிவிப்பு:
• மாற்றுத்திறன் சேவை: இந்த ஆப்ஸ் ஒரு மாற்றுத்திறன் சேவையாக இருப்பதால் உங்கள் செயல்பாடுகளையும் சாளர உள்ளடக்கத்தையும் இதனால் கண்காணிக்க முடியும்.
வாசிக்கச் சிரமப்படுபவர்களுக்கு வாசிப்புப் பயன்முறை உதவும்.
புதுப்பிக்கப்பட்டது:
21 செப்., 2026