உங்களுக்குத் தினசரி தேவைப்படுபவற்றை Google Wallet மூலம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் அணுகலாம். உங்கள் மொபைலைப் பயன்படுத்தியே, Google Pay ஏற்றுக்கொள்ளப்படும் அனைத்து இடங்களிலும் டேப்-டு-பே முறையில் பணம் செலுத்தலாம், போர்டிங் செய்யலாம், திரைப்பட டிக்கெட்டுகளை வாங்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம். நீங்கள் எங்கே சென்றாலும் ஒரே இடத்தில் இவை அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
பயன்படுத்த எளிதானது
உங்களுக்கு அத்தியாவசியமானவற்றை விரைவாகப் பெறுங்கள்
+ உங்களுக்குத் தினந்தோறும் தேவைப்படுபவற்றை அணுக மூன்று விரைவான வழிகள் உள்ளன: விரைவான அணுகலுக்கு உங்கள் மொபைலின் விரைவு அமைப்புகளைப் பயன்படுத்தலாம், உங்கள் முகப்புத் திரையில் இருந்தே Wallet ஆப்ஸைத் திறக்கலாம், உங்கள் கைகள் பிஸியாக இருக்கும்போது Google Assistantடைப் பயன்படுத்தலாம்.
Wear OS வாட்ச்சில் இருந்து Google Walletடை அணுகுங்கள்
+ Wear OS முதன்மை வாட்ச் முகப்பில் கூடுதல் விவரங்களுடன் Walletடிற்கான உடனடி அணுகலைப் பெறலாம்.
கார்டுகள், டிக்கெட்டுகள், பாஸ்கள் மற்றும் பலவற்றை இதில் எடுத்துச் செல்லுங்கள்
+ டிஜிட்டல் வாலட்டைக் கொண்டு ரயில் பயணம் செய்யலாம், இசை நிகழ்ச்சி பார்க்கலாம், பிடித்த ஸ்டோர்களில் ரிவார்டுகள் பெறலாம்.
+ [அமெரிக்காவில் மட்டும்] உங்கள் ஓட்டுநர் உரிமத்தையும் டிஜிட்டல் கார் சாவிகளையும் கொண்ட டிஜிட்டல் வாலட்டை வைத்துக்கொண்டு எங்கும் பயணம் செய்யலாம்.
வேண்டியவற்றை வேண்டிய நேரத்தில் பெறுங்கள்!
+ உங்களுக்கு அத்தியாவசியமான அனைத்தையும் உரிய நேரத்தில் உங்கள் Walletடால் பரிந்துரைக்க முடியும். பயண நாளின்போது உங்கள் போர்டிங் பாஸைப் பற்றிய அறிவிப்பைப் பெறுவீர்கள் என்பதால், மீண்டும் உங்கள் பையை ஆராய வேண்டியதில்லை.
உதவிகரமானது
ரசீதுகளைக் கண்காணித்தல்
+ Google Mapsஸில் இருந்து பெறப்பட்ட இருப்பிடம் போன்ற ஸ்மார்ட் விவரங்கள் உட்பட Walletடில் பரிவர்த்தனை விவரங்களை எளிதாகக் கண்டறியலாம்.
Google முழுவதும் சீரான ஒருங்கிணைப்பு
+ விமான அறிவிப்புகள், நிகழ்வு அறிவிப்புகள் போன்றவை தொடர்பான புதிய தகவல்களுடன் உங்கள் Calendarரும் Assistantடும் சமீபத்தியவையாக இருக்கும் வகையில் உங்கள் Walletடை ஒத்திசைக்கலாம்.
+ Maps, Shopping போன்ற பலவற்றில் மீதமுள்ள புள்ளிகளையும் லாயல்டி பலன்களையும் தெரிந்துகொள்வதன் மூலம் சிறப்பாக ஷாப்பிங் செய்யலாம்.
உடனடியாகத் தொடங்குங்கள்
+ Gmailலில் சேமித்துள்ள கார்டுகள், டிரான்ஸிட் பாஸ்கள், லாயல்டி கார்டுகள் மற்றும் பலவற்றை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம் என்பதால் சிரமமின்றி சுலபமாகத் தொடங்கலாம்.
எங்கிருந்தும் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
+ Google Searchசில் இருந்து பெறப்பட்ட சமீபத்திய தகவல்கள் மூலம் சிரமமின்றி போர்டிங் செய்யலாம். கேட் மாற்றங்கள் அல்லது எதிர்பாராத விமானத் தாமதங்கள் பற்றிய சமீபத்திய தகவல்களை Google Wallet தொடர்ந்து வழங்கும்.
பாதுகாப்பானது & தனிப்பட்டது
அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பான வழி
+ உங்களுக்கு அத்தியாவசியமான அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க, Google Walletடின் ஒவ்வொரு பிரிவிலும் பாதுகாப்பும் தனியுரிமையும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
Androidல் இருந்து நம்பகமான பாதுகாப்பு
+ இருபடிச் சரிபார்ப்பு, எனது மொபைலைக் கண்டுபிடி, தொலைவில் இருந்து தரவை அழித்தல் போன்ற Androidன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மூலம் உங்கள் தரவையும் உங்களுக்கு அத்தியாவசியமானவற்றையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
டேப்-டு-பே முறையைப் பயன்படுத்துவது உங்கள் கார்டைப் பாதுகாக்கும்
ALT: + உங்கள் Android மொபைல் மூலம் டேப்-டு-பே முறையில் பணம் செலுத்தும்போது, உங்கள் அசல் கிரெடிட் கார்டு எண்ணை பிசினஸுடன் Google Pay பகிராது, இதனால் உங்கள் பேமெண்ட் தகவல் பாதுகாப்பாகவே இருக்கும்.
உங்கள் தரவுக்கான கட்டுப்பாடு உங்களிடமே!
+ பிரத்தியேக அனுபவத்திற்காக, பயன்படுத்த எளிதான தனியுரிமைக் கட்டுப்பாடுகள் மூலம் Google தயாரிப்புகள் முழுவதும் தகவல்களைப் பகிர்வதற்கு ஒப்புதல் அளிக்கலாம்.
Android மொபைல்கள் (Pie 9.0+), Wear OS, Fitbit சாதனங்கள் ஆகிய அனைத்திலும் Google Wallet கிடைக்கும்.
கண்காணிக்கப்படும் கணக்குகளுக்குச் சில அம்சங்கள் கிடைக்காது. கண்காணிக்கப்படும் கணக்குகளுக்கான Wallet குறித்து இங்கே மேலும் அறிக: https://support.google.com/wallet?p=about_wallet_supervised
இன்னும் கேள்விகள் உள்ளனவா? support.google.com/wallet என்ற பக்கத்திற்குச் செல்லவும்
புதுப்பிக்கப்பட்டது:
9 ஜன., 2026