Family Link பெற்றோர் கட்டுப்பாடுகள் என்பது பெற்றோருக்கான Family Linkகின் துணைத் தயாரிப்பு ஆப்ஸ் ஆகும். பிள்ளை/டீன் ஏஜர் பயன்படுத்தும் சாதனத்தில் மட்டும் இதைப் பதிவிறக்கவும். Google வழங்கும் Family Link பெற்றோர் கட்டுப்பாடுகள் ஆப்ஸைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறு வயதுப் பிள்ளைகளோ டீன் ஏஜ் பிள்ளைகளோ அவர்கள் படிக்கும்போதும் விளையாடும்போதும் இணையத்தைப் பயன்படுத்தும்போதும் வழிகாட்டும் அடிப்படை டிஜிட்டல் விதிகளை Family Link ஆப்ஸ் மூலம் உங்கள் சாதனத்தில் இருந்தே அமைக்கலாம். 13 வயது அல்லது
ஒப்புதல் அளிக்க உங்கள் நாட்டில் அனுமதிக்கப்படும் வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு, பெரும்பாலான Google சேவைகளுக்கு அணுகல் உள்ள Google கணக்கையும் Family Link மூலம் உருவாக்கலாம்.
Family Link பெற்றோர் கட்டுப்பாடுகள் மூலம்:
சரியான உள்ளடக்கத்தைப் பெற பிள்ளைகளுக்கு வழிகாட்டலாம் • ஆப்ஸ் உபயோகத்தைப் பார்த்தல் - ஆப்ஸைப் பயன்படுத்திய நேரம் ஒவ்வொரு ஆப்ஸிற்கும் மாறுபடும். பிள்ளை தனக்கு விருப்பமான ஆப்ஸில் செலவிட்ட நேரத்தைக் காட்டும் செயல்பாட்டு அறிக்கைகள் மூலம் Android சாதனத்தில் செய்ய வேண்டியவை குறித்து சிறந்த முடிவுகளை எடுக்க அவருக்கு உதவலாம். தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர அறிக்கைகளைப் பார்க்கலாம்.
• ஆப்ஸை நிர்வகித்தல் - Google Play Storeரில் இருந்து பிள்ளை பதிவிறக்க விரும்பும் ஆப்ஸை அறிவிப்புகள் மூலம் அனுமதிக்கலாம் தடுக்கலாம். ஆப்ஸில் பிள்ளை வாங்குபவற்றை நிர்வகிப்பது, குறிப்பிட்ட ஆப்ஸை அவரது சாதனத்தில் மறைப்பது போன்றவற்றையும் உங்கள் சாதனத்தில் இருந்தே செய்யலாம்.
• ஏற்ற ஆப்ஸை வழங்குதல் - பிள்ளைக்கு ஏற்ற ஆப்ஸைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம் என்பதால் ஆசிரியர் பரிந்துரைக்கும் ஆப்ஸை Androidல் Family Link காட்டுகிறது. இவற்றைப் பிள்ளையின் சாதனத்தில் நேரடியாகச் சேர்க்கலாம்.
சாதன உபயோக நேரத்தைக் கண்காணிக்கலாம் • நேர வரம்பை அமைத்தல் - பிள்ளை எவ்வளவு நேரம் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டுமென நீங்கள் தீர்மானிக்கலாம். கண்காணிக்கப்படும் சாதனத்தில் அதை உபயோகிப்பதற்கான நேர வரம்பையும் உறக்க நேரத்தையும் Family Link மூலம் அமைக்கலாம். இது சாதனத்திலும் அன்றாடச் செயல்களிலும் பிள்ளை சரியான நேரத்தைச் செலவிட உதவும்.
• சாதனத்தை லாக் செய்தல் - பிள்ளை இடைவேளை எடுக்க வேண்டிய நேரத்தில் (வெளியில் சென்று விளையாடுவது, சாப்பிடுவது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது போன்றவை) கண்காணிக்கப்படும் சாதனத்தைத் தொலைநிலையில் இருந்தே நீங்கள் லாக் செய்யலாம்.
பிள்ளையின் இருப்பிடத்தைப் பார்க்கலாம் • பிள்ளை எங்கு சென்றாலும் அவரைக் கண்டுபிடிக்க இது உதவியாக இருக்கும். பிள்ளையிடம் Android சாதனம் இருக்கும் வரை Family Link மூலம் அவர் இருக்குமிடத்தை அறிந்துகொள்ளலாம்.
முக்கியமான தகவல்கள் • பிள்ளையின் சாதனத்தைப் பொறுத்து Family Link ஆப்ஸின் கருவிகள் மாறுபடும். இணக்கமான சாதனங்களின் பட்டியலை families.google.com/familylink/setup பக்கத்தில் பார்க்கவும்
• Google Playயில் இருந்து உங்கள் பிள்ளை வாங்குபவற்றையும் பதிவிறக்குபவற்றையும் நிர்வகிக்க Family Link உதவும். ஆனால் ஆப்ஸ் புதுப்பிப்புகள் (கூடுதல் அனுமதிகள் தேவைப்படும் புதுப்பிப்புகள் உட்பட), முன்பு அனுமதித்த ஆப்ஸ், குடும்ப லைப்ரரியில் பகிரப்பட்டுள்ள ஆப்ஸ் ஆகியவற்றை நிறுவ அவருக்கு அனுமதி தேவையில்லை. பிள்ளை நிறுவிய ஆப்ஸையும் அவற்றின் அனுமதிகளையும் Family Linkகில் பெற்றோர் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும்.
• கண்காணிக்கப்படும் சாதனத்தில் உள்ள ஆப்ஸைச் சரிபார்த்து, பிள்ளை பயன்படுத்தக்கூடாது என நீங்கள் நினைக்கும் ஆப்ஸை முடக்க வேண்டும். கவனத்திற்கு: சாதனத்தை வாங்கும்போதே நிறுவப்பட்டிருக்கும் சில ஆப்ஸை முடக்க முடியாமல் போகலாம்.
• பிள்ளை/டீன் ஏஜரின் சாதனம் இருக்குமிடத்தை அறிய, அது ஆன் செய்யப்பட்டிருப்பதுடன் இணையத்துடன் இணைக்கப்பட்டு சமீபத்தில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
• அமெரிக்காவில் குறிப்பிட்ட வயதுடைய பிள்ளைகளின் பெற்றோர் வைத்துள்ள Android சாதனங்களில் மட்டுமே ஆசிரியர் பரிந்துரைக்கும் ஆப்ஸ் கிடைக்கின்றன.
• பிள்ளையின் ஆன்லைன் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கான கருவிகளை Family Link வழங்கினாலும் பாதுகாப்பான இணையத்தை வழங்குவதில்லை. ஆனாலும் இணையத்தைப் பிள்ளைகள் எப்படிப் பயன்படுத்த வேண்டுமெனத் தீர்மானிக்கவும் இணைய உபயோகம் குறித்துப் பேசுவதை ஊக்குவிக்கவும் பெற்றோருக்கு இது உதவுகிறது.