Android Accessibility Suite என்பது பல மாற்றுத்திறன் ஆப்ஸைக் கொண்ட ஒரு தொகுப்பாகும், இதன்மூலம் திரையைப் பார்க்காமலோ சுவிட்ச் சாதனத்தின் மூலமோ உங்கள் Android சாதனத்தைப் பயன்படுத்த முடியும்.
Android Accessibility Suiteடில் உள்ள வசதிகள்:
• மாற்றுத்திறன் மெனு: திரையில் தோன்றும் இந்தப் பெரிய மெனுவைப் பயன்படுத்தி உங்கள் மொபைலை லாக் செய்யலாம், ஒலியளவையும் ஒளிர்வையும் கட்டுப்படுத்தலாம், ஸ்கிரீன்ஷாட்களை எடுக்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.
• பேசும் திரை: உங்கள் திரையில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றைச் சத்தமாக வாசிக்கச் செய்து கேட்கலாம்.
• Talkback ஸ்கிரீன் ரீடர்: பேச்சுவடிவ விளக்கத்தைப் பெறலாம், சைகைகள் மூலம் சாதனத்தைக் கட்டுப்படுத்தலாம், திரையில் தோன்றும் பிரெய்ல் கீபோர்டு மூலம் டைப் செய்யலாம்.
தொடங்குவதற்கு:
1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
2. மாற்றுத்திறன் வசதியைத் தேர்ந்தெடுக்கவும்.
3. மாற்றுத்திறன் மெனு, பேசும் திரை அல்லது TalkBackகைத் தேர்ந்தெடுக்கவும்.
அனுமதிகள் குறித்த அறிவிப்பு
• மொபைல்: அழைப்பு நிலைக்கு ஏற்ப அறிவிப்புகளை வழங்குவதற்காக Android Accessibility Suite உங்கள் மொபைல் நிலையைக் கண்காணிக்கும்.
• மாற்றுத்திறன் சேவை: இந்த ஆப்ஸ் ஒரு மாற்றுத்திறன் சேவை என்பதால் உங்கள் செயல்பாடுகளைக் கண்காணிக்கும், சாளர உள்ளடக்கத்தை மீட்டெடுக்கும், நீங்கள் டைப் செய்யும் உரையைக் கண்காணிக்கும்.
• அறிவிப்புகள்: இந்த அனுமதியை நீங்கள் வழங்கினால், அறிவிப்புகள் குறித்து TalkBack உங்களுக்குத் தெரிவிக்க முடியும்.
புதுப்பிக்கப்பட்டது:
30 செப்., 2025